வருமான வரி சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது குற்றச்சாட்டு
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, அந்த வீட்டில் இருந்த சுமார் ரூ.50 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. வருமான வரித்துறை சோதனை நடப்பதற்கு முன், அந்த வீட்டிற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாமஸ் என்பவர் வந்து சென்றிருந்தது தெரியவந்தது.
எனவே கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட இந்த சம்பவத்தில், நில விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. எனவே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது.
இதுபற்றி முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவிக்கையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. இதுதொடர்பு புகார் வரும் பட்சத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை எம்.எல்.ஏ. தாமஸ் மறுத்து உள்ளார்.
Related Tags :
Next Story