இந்தியாவில் 8.68 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை


இந்தியாவில் 8.68 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை
x
தினத்தந்தி 11 Oct 2020 10:39 AM IST (Updated: 11 Oct 2020 10:39 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா வைரசுக்கான மாதிரிகளின் பரிசோதனை எண்ணிக்கை 8 கோடியே 68 லட்சத்து 77 ஆயிரத்து 242 ஆக உயர்வடைந்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  சமூக இடைவெளி, முககவசம் அணிவது உள்ளிட்டவற்றை பின்பற்றும்படி மக்களை கேட்டு கொண்டுள்ளது.

எனினும், தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தபடியே உள்ளது.  இதுவரை 70.53 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இந்தியாவில் 60 லட்சம் பேர் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்து உள்ளனர்.  இதேபோன்று, அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட வரிசையில் முன்னிலையில் உள்ள 5 மாநிலங்களானது (61% சிகிச்சை பெறுவோர்) நாட்டின் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கையில் பாதியளவிற்கு (54.3%) கொண்டுள்ளது.

நேற்று ஒரு நாளில் 10 லட்சத்து 78 ஆயிரத்து 54 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.  இதனால், நாட்டில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நாள் முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை எண்ணிக்கை 8 கோடியே 68 லட்சத்து 77 ஆயிரத்து 242 ஆக உயர்வடைந்து உள்ளது.

Next Story