இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 86.17 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 86.17 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து நிலையில், நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசாக உயர்ந்து வருவதுடன், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 86.17 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 918 போ உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,08,334 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 74,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 70,53,807-ஆக அதிகரித்தது. இதுவரை 60,77,977 பேர் கொரோனாதொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் விகிதம் 86.17 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் அதிகயளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களில் இருந்து அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட குணமடைந்து வருகின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அதன்படி, மராட்டியத்தில் 12,29,339 பேரும், கர்நாடகம் 5,61,610 பேரும், கேரளம் 1,75,304, ஆந்திரம் 6,91,040 மற்றும் தமிழ்நாடு 5,91,811 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஐந்து மாநிலங்களில் மீட்கப்பட்டோரின் எண்ணிக்கை 54.3 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,67,496 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.54 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story