விவசாயிகளுக்கு சொத்து அட்டைகள் வழங்கும் திட்டம் - பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
விவசாயிகளுக்கு சொத்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமல்படுத்தப் படுகிறது. மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமை பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக அவை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு சொத்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக உத்தர பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகம் ஆகிய 6 மாநில விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
விவசாயிகளுக்கு வழங்கப்படும் அட்டையில் குறிப்பிடப்படும் சொத்துக்களைப் பயன்படுத்தி கடன் பெறுவதற்கு இந்த அட்டை உதவும்.
விவசாயிகளின் சொத்து விவரங்களை ஒரே அட்டையின் மூலம் பதிவு செய்யப்படும். விவசாயிகளின் கடன்பெறும் முறையை சொத்து அட்டை எளிதாக மாற்றும்.
Related Tags :
Next Story