கிராமங்களில் 2 கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன; பிரதமர் மோடி பேச்சு
கிராமப்புறங்களில் வசிக்கும் 2 கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்க அரசு முயற்சி மேற்கொண்டது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
கிராமப்பகுதிகளில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமங்களை ஆய்வு செய்து அவற்றை ஒன்றிணைக்கும் ‘ஸ்வாமித்வா’ என்ற திட்டத்தின் கீழ் சொத்துகளுக்கான அடையாள அட்டைகளை வினியோகிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்பொது, லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோர் பிறந்த தினம் இன்று. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் இதுபோன்ற சிறந்த பணியை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
பல தசாப்தங்களாக, நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு சொந்த வீடுகள் இல்லாமல் இருந்தனர். ஆனால் இன்று, கிராமப்புறங்களில் வசிக்கும் 2 கோடி ஏழை குடும்பங்களுக்கு அருமையான வீடுகள் கிடைத்துள்ளன என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story