ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் மீது ராகுல் காந்தி விமர்சனம்


ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் மீது ராகுல் காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 11 Oct 2020 2:21 PM IST (Updated: 11 Oct 2020 2:21 PM IST)
t-max-icont-min-icon

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி 20 வயது இளம் பெண் 4 -பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். காயங்களுடன் சிகிச்சை பெற்ற நிலையில், அப்பெண் இருவாரம் கழித்து உயிரிழந்தார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை உத்தர பிரதேச அரசு கையாண்ட விதமும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவில் குடும்பத்தினரை அனுமதிக்காமல் தகனம் செய்தது,  முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாத நபர்கள் என வழக்குப்பதிவு செய்தது என உ. பி போலீசார் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

 இதையடுத்து, இந்த வழக்கை உத்தர பிரதேச அரசு, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. சிபிஐயும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.  

இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று காலை வெளியிட்ட டுவிட் பதிவில், “ வெட்கக்கேடான உண்மை என்னவென்றால், தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை பல இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை. யாரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று முதல்வரும் அவரது காவல்துறையினரும் கூறுகிறார்கள்.

 ஏனென்றால் அவர்களுக்கும், மேலும் பல இந்தியர்களுக்கும், அந்த பெண் முக்கியம் இல்லை’ என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.  மேலும்,  ஹத்ராஸ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என போலீசார் கூறிய செய்தியை மேற்கோள் காட்டி மேற்கண்ட டுவிட் பதிவை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

Next Story