குஜராத்தில் இன்று 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


குஜராத்தில் இன்று 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 11 Oct 2020 3:19 PM GMT (Updated: 11 Oct 2020 3:19 PM GMT)

குஜராத்தில் இன்று 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அகமதாபாத்,

குஜராத் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,596 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு இன்று 9 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,569 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 15,717 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,32,310 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Next Story