எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்- இந்தியா தக்க பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6.45- மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
ஸ்ரீநகர்,
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க தயங்குவதில்லை. அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளையும் நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்து வருகிறது. எனினும் பாகிஸ்தான் திருந்தியபாடில்லை.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தெர்பனி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் மாலை 6.45 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஆயுதங்கள் மூலமாக எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
Related Tags :
Next Story