ஹத்ராஸ் இளம்பெண் படுகொலை; குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராக புறப்பட்டனர்
ஹத்ராஸ் இளம்பெண் படுகொலை வழக்கில் அவரது குடும்பத்தினர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜராவதற்காக இன்று காலை புறப்பட்டு சென்றனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட இன பெண் கூட்டு கற்பழிப்பு, சித்ரவதைக்கு ஆளாகி கொல்லப்பட்டார். அவரது உடல், வலுக்கட்டாயமாக இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. இதன்படி, இந்த வழக்கில் ஆஜராவதற்காக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றனர்.
இதுபற்றி சப்டிவிசனல் மாஜிஸ்திரேட் அஞ்சலி கங்வார் கூறும்பொழுது, நான் அவர்களுடன் செல்கிறேன். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்கின்றன.
எங்களுடன் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் சூப்பிரெண்டு ஆகியோரும் பாதுகாப்பிற்காக வருகின்றனர் என கூறியுள்ளார். இந்த வழக்கில் பெண்ணின் குடும்பத்தினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர்.
Related Tags :
Next Story