நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு


நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி  - குஷ்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 8:50 AM GMT (Updated: 2020-10-12T14:20:13+05:30)

பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம் என்று அக்கட்சியில் இணைந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, பாஜக தலைமை அலுவலகம் சென்று அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கடந்த சில வாரங்களாகவே குஷ்பு, அதிருப்தியில் இருப்பதாகவும் பாஜகவில் சேர முடிவு செய்து இருப்பதாகவும் பரவலாக எழுந்த தகவல்களுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் இணைந்த பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த குஷ்பு, “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற சிறப்பாக பாடுபடுவேன். நாட்டை சரியான பாதையில் பிரதமர் மோடி எடுத்துச்செல்கிறார். 

பிரதமர்மோடி போன்ற தலைமை நாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன்.  பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது கோடிக்கணக்கான  மக்கள் நம்பிக்கை வைத்துள்ள்னர். பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம்” என்றார். 


Next Story