கேரளாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு


கேரளாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 7:20 PM IST (Updated: 12 Oct 2020 7:20 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இன்று ஒரே நாளில் 5,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கேரளாவில் நேற்று முன்தினம் 11 ஆயிரத்தை தாண்டியும் நேற்று 9 ஆயிரத்தை தாண்டியும் கொரோனா பாதிப்பு இருந்தது.

இந்த நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி 5,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,95,132 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1003 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 7,836 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,99,634 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு தற்போது 94,388 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.

Next Story