11 நாடாளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு


11 நாடாளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2020 7:35 AM GMT (Updated: 13 Oct 2020 7:35 AM GMT)

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 11 நாடாளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வருகிற நவம்பர் 9ந்தேதி நடைபெறும் என தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற மேலவையின் 11 உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற நவம்பர் 25ந்தேதியுடன் முடிவடைகின்றன.  இவற்றில் உத்தர பிரதேசத்தில் 10 இடங்களும், உத்தரகாண்டில் ஓரிடமும் காலியாகும்.

மேலவை எம்.பி. பதவிக்கான இடங்கள் காலியாகும் சூழலில் அவற்றை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பினை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.  இந்த அறிவிப்பில், 11 நாடாளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 11ந்தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

இதன்படி, தேர்தல் வருகிற நவம்பர் 9ந்தேதி நடைபெற உள்ளது.  அதே நாளில் வாக்கு பதிவும் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஓட்டுப்பதிவு காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் நடைபெற்று முடிவடையும்.  இதன்பின்னர் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story