அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கும் -மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்


அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கும் -மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
x
தினத்தந்தி 13 Oct 2020 1:37 PM IST (Updated: 13 Oct 2020 1:37 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது, ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

புதுடெல்லி:

உலகில் அமெரிக்காவிற்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும்.

நாடு முழுவதும் தினமும் பதிவாகும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 60,000 க்கும்  குறைவாக உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை  71,75,880 ஆக உயர்ந்து உள்ளது

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கக்கூடும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தெரிவித்தார்.

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட  தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் நிபுணர் குழுக்கள் ஏற்கனவே நாட்டில் தடுப்பூசிகளின் விநியோகத்தை எவ்வாறு வெளியிடுவது என்று திட்டமிட்டு அதற்கு தகுந்த திட்டங்கலை வகுத்து வருகின்றன.

இந்திய மக்களுக்காக கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப நாட்டில் பல கொரோனா தடுப்பூசிகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

Next Story