ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்


ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2020 10:44 AM IST (Updated: 14 Oct 2020 10:44 AM IST)
t-max-icont-min-icon

பண்டிகை காலங்களில் ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

புதுடெல்லி:

வகுப்புவாத பிளவுகளை உருவாக்கும் முயற்சியில், பண்டிகை காலங்களில் இந்து ஆதிக்கம் நிறைந்த ஜம்மு-காஷ்மீரில் பபயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

உளவுத்துறை தகவல்களின்படி, ஜம்மு-காஷ்மீரில் இந்து ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் சாத்தியமான தாக்குதல்களை நடத்த அல்-பத்ர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முசாபராபாத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயங்கரவாதிகளுக்கு முன்னாள் மூத்த புலனாய்வு (ஐ.எஸ்.ஐ) அதிகாரியின் கீழ் பயிற்சி அளிக்கப்படுவதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது.


Next Story