தேசிய செய்திகள்

தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது-ராகுல் காந்தி விமர்சனம் + "||" + India Set To Drop Below Bangladesh In 2020 Per Capita GDP In IMF Forecast

தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது-ராகுல் காந்தி விமர்சனம்

தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது-ராகுல் காந்தி விமர்சனம்
ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கை இன்று வெளியிட்டது.
புதுடெல்லி,

தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம், இந்தியாவுக்கு நெருக்கமாக  வந்துவிட்டது என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளதை  மேற்கோள் காட்டியுள்ள ராகுல் காந்தி, பாஜக அரசை விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  பாஜகவின் வெறுப்பு நிரம்பிய கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு அருமையான சாதனை. வங்கதேசம் இந்தியாவை முந்தப் போகிறது”  என்று தெரிவித்துள்ளார்.

ஐஎம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை  முந்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2021- மார்ச் நிதியாண்டில், இந்தியாவின் தனிநபர் வருமானம் 1,877 (டாலர் மதிப்பில்) ஆக இருக்கும் எனவும் வங்காள தேசத்தில் இதே கால கட்டத்தில் தனிநபர் வருமானம் 1,888 டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி
எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2. புதிய வேளாண் சட்டங்கள் ‘ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீதான தாக்குதல்’-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானது என்றால், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
3. பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்- மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் வகிக்கிறது. இதற்காக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார்.
4. ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் மீது ராகுல் காந்தி விமர்சனம்
கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி 20 வயது இளம் பெண் 4 -பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். காயங்களுடன் சிகிச்சை பெற்ற நிலையில், அப்பெண் இருவாரம் கழித்து உயிரிழந்தார்.
5. பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த ராகுல் காந்தி- பாஜக பதிலடி
காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமின்றி, காற்றில் இருந்து சுத்தமான குடிநீர், சுத்தமான ஆக்ஸிஜனையும் பிரித்து எடுக்கும் சாத்தியங்கள் இருக்கிறதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருந்தார்.