மராட்டியத்தில் நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி


மராட்டியத்தில் நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி
x
தினத்தந்தி 14 Oct 2020 6:04 PM IST (Updated: 14 Oct 2020 6:04 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மெட்ரோ ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

மும்பை,

மராட்டியத்தில்  மெட்ரோ ரெயில் சேவையை மீண்டும் துவங்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், நாளை (அக்டோபர் 15) முதல் படிப்படியாக மெட்ரோ ரெயில் சேவை துவங்க உள்ளது.  

கொரோனா முன் எச்சரிக்கை விதிகளுடன் மெட்ரோ ரெயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், அரசு மற்றும் தனியார் நூலகங்களை நாளை முதல்  திறக்கவும்  மராட்டிய அரசு அனுமதி அளித்துள்ளது. 

வாரச்சந்தைகள் செயல்படவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.  திரையரங்குகள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை தொடர்கிறது.


Next Story