கேரளாவில் இன்று மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் இன்று மேலும்  6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 14 Oct 2020 2:33 PM GMT (Updated: 2020-10-14T20:03:48+05:30)

கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது

திருவனந்தபுரம், 

கேரளாவில் இன்று மேலும் 6,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கேரளாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இன்று 7,792 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரமாக உள்ளது. 

கொரோனா தொற்றுடன் 93,837-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கேரளாவில் அதிகபட்சமாக இன்று மலப்புரம் மாவட்டத்தில் 1013- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story