தேசிய செய்திகள்

ஹவுரா-யஷ்வந்தபுரம் இடையே ஏ.சி. சிறப்பு ரெயில் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே தகவல் + "||" + A.C. between Howrah-Yeshwantpur. Special Rail Movement - Southwestern Railway Information

ஹவுரா-யஷ்வந்தபுரம் இடையே ஏ.சி. சிறப்பு ரெயில் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்

ஹவுரா-யஷ்வந்தபுரம் இடையே ஏ.சி. சிறப்பு ரெயில் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
ஹவுரா-யஷ்வந்தபுரம் இடையே ஏ.சி. சிறப்பு ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தென்மேற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஹவுரா-யஷ்வந்தபுரம் இடையே இருமார்க்கமாக ஏ.சி. வாராந்திர சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 19-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் வாரந்தோறும் ஹவுராவில் இருந்து யஷ்வந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் ஹவுராவில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்படும் ரெயில்(வண்டி எண்:-02683) மறுநாள் காலை 4.25 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடையும்.

மறுமார்க்கமாக வருகிற 21-ந் தேதி(புதன்கிழமை) முதல் வாரந்தோறும் யஷ்வந்தபுரத்தில் இருந்து ஹவுராவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. வாரந்தோறும் புதன்கிழமைகளில் யஷ்வந்தபுரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் 4.25 மணிக்கு ஹவுராவை சென்றடையும். இந்த ரெயில்களில் ஒரு ஏ.சி. முதல் வகுப்பு பெட்டி, 3 ஏ.சி. 2-ம் வகுப்பு பெட்டிகள், 12 ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டிகள், ஜெனரேட்டர் வசதியுடன் கூடிய 2 லக்கேஜ் கம் பிரேக் வேன், சமையல் வசதியுடன் கூடிய ஒரு ஏ.சி. பெட்டி ஆகியவை பொருத்தப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.