தேசிய செய்திகள்

75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி + "||" + Prime Minister Narendra Modi releases a commemorative coin of Rs 75 to mark the 75th anniversary of the Food and Agriculture Organization

75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி
உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
புதுடெல்லி,

உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும், இந்தியாவுக்கும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி, 75 ரூபாய் மதிப்பாலான சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.