எல்லை விவகாரம்: இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் நடந்துவரும் பேச்சுவார்த்தை மிகவும் ரகசியமானது-மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்


எல்லை விவகாரம்: இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் நடந்துவரும் பேச்சுவார்த்தை மிகவும் ரகசியமானது-மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 16 Oct 2020 2:19 PM IST (Updated: 16 Oct 2020 2:19 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையில், எல்லை விவகாரம் தொடர்பாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமானது எனவும், அது குறித்து தான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை

புதுடெல்லி

இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையில், எல்லை விவகாரம் தொடர்பாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமானது எனவும், அது குறித்து தான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை எனவும் இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்கூறியதாவது:-

இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையேயான ரகசியம், அதை நான் பொதுவெளியில் கூற விரும்பவில்லை. மேலும் அந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து முன்கூட்டியே நாம் யூகிக்க முடியாது.

எல்லையில் அமைதியை நிலைநாட்ட 1993 முதல் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதிலிருந்து இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக எல்லையில் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.  இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தின் சூழலை உருவாக்காமல் இருப்பது, இரு நாடுகளுக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை பின்பற்றாமல் போவது போன்ற விஷயங்களே இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளுக்கு காரணம் என கூறினார்.

Next Story