நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 99.99% பெற்று முதல் இடம் பிடித்த ஒடிசாவின் சோயிப் அப்தப்


நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 99.99% பெற்று முதல் இடம் பிடித்த ஒடிசாவின் சோயிப் அப்தப்
x
தினத்தந்தி 16 Oct 2020 9:57 PM IST (Updated: 16 Oct 2020 9:57 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ஒடிசாவின் சோயிப் அப்தப் 99.99% பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.

புவனேஸ்வர்,

ஒவ்வொரு வருடமும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 13ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.

இந்த தேர்வுக்கு மொத்தம் 15.97 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 14.37 லட்சம் பேர் தேர்வை எழுதினர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தேர்வு மையங்களில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்பட்டது.

இதேபோன்று, கொரோனாவால் நீட் தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்காக கடந்த 14ந்தேதி இரண்டாம் கட்டமாக தேர்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்படும் என்று மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டார்.

தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ள தேர்வு முடிவுகளை, தேர்வர்கள் தங்களின் பதிவு எண்ணை உள்ளிட்டு அறிந்து கொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நீட் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்தன.  இதுபற்றி தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ஒடிசா மாநிலத்தின் சோயிப் அப்தப் என்ற மாணவர் 99.99% பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.

Next Story