தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - ப.சிதம்பரம் வலியுறுத்த​ல் + "||" + Central government should reverse decision about cancelling Jammu and Kashmir special status - Chidambaram

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - ப.சிதம்பரம் வலியுறுத்த​ல்

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - ப.சிதம்பரம் வலியுறுத்த​ல்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370 -வது அரசியல் சாசன சட்டத்தை நீக்கிய முடிவை, பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370 -வது  அரசியல் சாசன சட்டத்தை  நீக்கிய முடிவை, பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், சட்டத்திற்குப் புறம்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மோடி அரசால் எடுக்கப்பட்ட முடிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.


காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நிலை நிறுத்தவும், ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மக்களின் உரிமைகள் நிலை நிறுத்த, ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தை சார்ந்த பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு போரை முன்னெடுத்து இருப்பது நல்ல முன்னேற்றம் என்று தெரிவித்துள்ள ப.சிதம்பரம், இந்திய மக்கள் அனைவராலும் இது வரவேற்கப்பட வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ - மெகபூபா சொல்கிறார்
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.
2. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் - 4 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியல் 4 பொதுமக்கள் காயமடைந்தனர்.