மராட்டியத்தில் இன்று மேலும் 10,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + A further 10,259 people in Maharastra were confirmed to be infected with corona today
மராட்டியத்தில் இன்று மேலும் 10,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் புதிதாக 14,238 பேருக்கு கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் இன்று மேலும் 10,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,86,321 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 250 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 41,965 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 14,238 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 13,58,606 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,85,270 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.