அரபிக் கடல் பகுதியில் நடைபெற்ற பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி


அரபிக் கடல் பகுதியில் நடைபெற்ற பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
x
தினத்தந்தி 18 Oct 2020 1:58 PM IST (Updated: 18 Oct 2020 1:58 PM IST)
t-max-icont-min-icon

அரபிக்கடலில் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

பாலாசோர்,

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), ர‌ஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியை விட வேகமாக செல்லும் இந்த ஏவுகணைகள் தரை, வான், கடல் என 3 விதமான பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்  அரபிக்கடலில், கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

நகரும் வாகனத்தில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை 300 கி.மீ தொலைவில் இருந்த குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது என டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது.

Next Story