மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி நாளை உரை
பிரதமர் மோடி நாளை காணொலிக் காட்சி வாயிலாக மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,
1916ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி, மைசூர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இது நாட்டின் ஆறாவது மற்றும் கர்நாடக மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமாகும். மைசூர் சமஸ்தானத்தின் மகாராஜாவான நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் மற்றும் திவான் சர் எம்.வீ. விஸ்வேஸ்வரையா ஆகியோரால் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
இந்நிலையில் மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா நாளை (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
கர்நாடக மாநில ஆளுநர் மற்றும் பல்கலைக்கழகத்தின் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். சிண்டிகேட் மற்றும் கல்வி குழுமத்தின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகள், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகக் கலந்து கொள்வர்.
Related Tags :
Next Story