கொரோனா வைரசின் 2வது அலை குளிர் காலத்தில் சாத்தியம்; நிபுணர் குழு தகவல்


கொரோனா வைரசின் 2வது அலை குளிர் காலத்தில் சாத்தியம்; நிபுணர் குழு தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2020 2:03 PM GMT (Updated: 18 Oct 2020 2:03 PM GMT)

கொரோனா வைரசின் 2வது அலை குளிர் காலத்தில் ஏற்பட சாத்தியம் உள்ளது என்று கொரோனா தடுப்பு நிபுணர் குழுவின் தலைவர் வி.கே. பால் இன்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா தொற்றுகளை எதிர்கொள்ளும் ஒருங்கிணைப்பு முயற்சிக்காக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் இருந்து வருகிறார்.

அவர் இன்று கூறும்பொழுது, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்துகள் கிடைத்தவுடன், அவற்றை வழங்க போதிய வளங்கள் உள்ளன.  பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் செய்து விடவும் முடியும்.

நாட்டில் கடந்த 3 வாரங்களில் கொரோனா வைரசின் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை
சரிவடைந்து உள்ளன.  எனினும், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் 3 முதல் 4 யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்தியா இதுவரை நல்ல நிலையில் உள்ளது.  எனினும், நாடு இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும்.  ஏனெனில், 90 சதவீத மக்கள் கொரோனா பாதிப்புகள் ஏற்பட கூடிய சாத்திய நிலையிலேயே இன்னும் உள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் உயர கூடிய சூழல் காணப்படுகிறது என்று கூறிய அவர், இந்தியாவில் 2வது கொரோனா பாதிப்பு அலை ஏற்படுவதற்கான சாத்தியகூறுகளை மறுப்பதற்கு இல்லை.  அவை ஏற்படலாம்.  நாம் இன்னும் வைரசை பற்றி கற்றறிந்து கொள்ளும் நிலையிலேயே இருக்கிறோம் என்று கூறினார்.

Next Story