ஐதராபாத் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வாரம் புதன்கிழமை இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வாரம் புதன்கிழமை இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலர் பலியானார்கள். அந்த வெள்ளம் வடிந்து முடிந்த சமயத்தில் நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் அங்கு கனமழை பொழிந்தது.
ஏற்கனவே அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்திருந்ததால் உடனே வெள்ளமாக பெருக்கெடுக்க ஆரம்பித்தது. எனவே அங்கு இரண்டாம் கட்டமாக வெள்ள அபாயம் அதிகமானது. இந்த இரண்டாம் சுற்று வெள்ளத்தில் நேற்று ஒரு சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுமி ஒருத்தி இறந்துள்ளாள். அக்டோபர் இறுதி வரை அங்கு மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
Related Tags :
Next Story