பா.ஜனதா.அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான நிலையில் உள்ளன- சோனியாகாந்தி
பா.ஜனதா அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான கட்டத்தில் உள்ளன என சோனியாகாந்தி தாக்கி உள்ளார்.
புதுடெல்லி:
கட்சியில் புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின் கூட்டத்தில் சோனியாகாந்தி உரையாற்றும் போது கூறியதாவது:-
அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளான் சட்டங்கள், கொரோனா வைரஸ் வெடிப்பைக் கையாளுதல், பொருளாதார மந்தநிலை மற்றும் பட்டியல் சாதியினருக்கு எதிரான கொடுமைகள் நாட்டில் ஜனநாயகம் அதன் மிகவும் நெருக்கடியானகட்டத்தை கடந்து வருகின்றன.
நாட்டில் "பசுமைப் புரட்சியின்" லாபங்களைத் கொள்ளையடிக்க ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் பசுமைப் புரட்சி நிகழ்த்திய பஞ்சாப் விவசாயிகள் பெரிய நிறுவனங்களுக்கு நேரடியாக விற்கவும் அனுமதிக்கும் புதிய வேளான் சட்டங்கள் குறித்து மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
கோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள், உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் சிறு கடைக்காரர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. இந்த மோசமான சதியைத் தோற்கடிக்க கைகோர்ப்பது நமது முழுமையான கடமை.
பாஜக அரசின் சுத்த திறமையின்மை மற்றும் தவறான நிர்வாகத்தால் நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய்"படுகுழியில்" தள்ளப்பட்டு உள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்தை இந்த அரசு வேடிக்கை பார்த்தது.
21 நாட்களுக்குள் கொரோனாவை ஒழிப்பதாக உறுதியளித்த ஒரு பிரதமர் குடிமக்கடிக்கள் மீதான தனது மற்றும் அவரது அரசாங்கத்தின் பொறுப்பைக் கைவிட்டு விட்டார் என்பது தெளிவான உண்மை.
இதற்கு முன்னர் கண்டிராத அளவு பொருளாதார வீழ்ச்சி அடைந்து உள்ளது.
இன்று, இளைஞர்களுக்கு வேலைகள் இல்லை. கிட்டத்தட்ட 14 கோடி வேலைகள் இழப்பு ஏற்பட்டுள்ளன. சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் பிற சிறு நிறுவனங்கள் முன்னோடியில்லாத அளவு மூடப்படுகின்றன, ஆனால் அக்கறையற்ற அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது.
இதற்கிடையில், தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் ஒரு "புதிய உச்சத்தை" எட்டியுள்ளன. ஒடுக்கப்பட்ட குடும்பங்களின் குரல் அரசின் அமைப்புகளால் அடக்கப்படுகிறது. இது தான் புதிய 'ராஜ தர்மமா?' என கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பா.ஜனதா தலைமையிலான அரசாங்கத்தின் விவசாயிகள் எதிர்ப்பு, பெண்கள் எதிர்ப்பு, தொழிலாளர் எதிர்ப்பு மற்றும் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
இவற்றில் முதலாவது - விவசாயிகள் எதிர்ப்பு மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராகவும், ஹத்ராஸைச் சேர்ந்த 20 வயது பெண்ணின் மரணத்திற்கு நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாகவும் - காங்கிரஸ் அக்டோபர் 31 போராட்டம் நடத்தும்.
இந்த நாள் சர்தார் வல்லப் பாய் படேலின் பிறந்த நாள், மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மரண ஆண்டுவிழா.
"இந்த நாளில் சத்தியாக்கிரகம் மற்றும் உண்ணாவிரதம் ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்" என்று காங்கிரஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story