மிசோரம் மாநிலத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை
மிசோரமில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மிஸ்வால்,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளபோதும் சில மாநிலங்கள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிரம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான மிசோரம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளபோதும் மிசோரம் மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.
இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மிசோரமில் 2,253 பேருக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் தொற்று காரணமாக யாரும் இதுவரை இறக்கவில்லை. 2148 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 105 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story