“கொரோனா தடுப்பு மருந்து - இந்தியா முன்னணி“ - பிரதமர் மோடி


“கொரோனா தடுப்பு மருந்து - இந்தியா முன்னணி“ - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 19 Oct 2020 9:56 PM IST (Updated: 19 Oct 2020 9:56 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னணியில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

சுகாதாரம் மற்றும் வளர்ச்சியில் இருக்கும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச கூட்டுறவை மேம்படுத்த கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. 

உலகத்துக்காக இந்தியா என்னும் தலைப்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள், புகழ் பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்த கொள்கின்றனர். கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கும் கொரோனா சவால்களை எதிர்கொள்வதற்கும் தேவைப்படும் முக்கிய முன்னுரிமைகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர்.

இந்நிலையில் 2020 ம் ஆண்டுக்கான கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். அதில் பேசிய அவர், “கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. உலக அளவில் பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகளில் 60% இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. விஞ்ஞானம் மற்றும் புதுமையில் முதலீடு செய்யும் அமைப்புகளே எதிர்காலத்தை வடிவமைக்கும். இந்தியாவில் சிறப்பான சுகாதார வசதிகளுக்கு பல புதுமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு” என்று தெரிவித்துள்ளார். 

Next Story