பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் 50 சதவிதம் பேர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு


பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் 50 சதவிதம் பேர் கொரோனாவால் பாதிக்க  வாய்ப்பு
x
தினத்தந்தி 20 Oct 2020 3:46 AM IST (Updated: 20 Oct 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா தொற்றின் உச்சம் செப்டம்பர் மாத மத்தியில் இருந்ததாகவும் அதன்பிறகு குறையத் தொடங்கி உள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் உச்சம் செப்டம்பர் மாத மத்தியில் இருந்ததாகவும் அதன்பிறகு  குறையத் தொடங்கி உள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.  இந்தியாவில் சமீபத்திய தரவுகளின் படி தினசரி சராசரி பாதிப்பு 61 ஆயிரமாக தற்போது உள்ளது. 

இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 50 சதவிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கொரோனா பாதிப்பு குறித்து திட்டமிட மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த  நிபுணர் குழு உறுப்பினரும் இந்திய  இன்ஸ்டிடியூட் டெக்னாலாஜியின் பேராசரியருமான மனிந்த்ரா அகர்வால் கூறுகையில், “ தற்போது இந்திய மக்கள் தொகையில்  30 சதவிதம் பேருக்கு  கொரோனா பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என  கணித மாடல் படி நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். வரும் பிப்ரவரியில் இது 50 சதவீதமாக உயரக்கூடும்.  மத்திய அரசின் செரோ சர்வேவை விட தற்போது தொற்று பரவல் அதிகமாக உள்ளது” என்றார். 

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75 லட்சமாகும். உலக நாடுகளின் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.


Next Story