பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு


பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார்  -கருத்துக் கணிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2020 7:22 AM IST (Updated: 21 Oct 2020 7:22 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பாட்னா

பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் 2020, கொரோனா தொற்றுநோய் கால கட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்.டி.ஏ) பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தனுக்கும் (எம்ஜிபி) நேரடிப் போட்டி ஏற்பட்டு உள்ளது.

லோக்னிட்டி-சி.எஸ்.டி.எஸ் எடுத்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில்  நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

நிதிஷ்குமார் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும், அதே நேரத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அவருக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 133 முதல் 143 இடங்கள் வரை வெல்லக்கூடும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான 5 கட்சிகளின் மெகா கூட்டணிக்கு 88 முதல் 98 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்னிட்டி-சி.எஸ்.டி.எஸ் கருத்துக் கணிப்பில் தேஜாஷ்வி யாதவின் புகழ் இப்போது நிதிஷ்குமாரை விட நான்கு சதவீதம் குறைவாக உள்ளது. 10 வாக்காளர்களில் மூன்று பேர் நிதிஷ்குமாரை முதல்வராக விரும்புகிறார்கள், 27 சதவீதம் பேர் 30 வயதான தேஜாஷ்வி யாதவை விரும்புகிறார்கள்.


Next Story