இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55,838 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 68,74 லட்சமாக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக குறைய தொடங்கியநிலையில், தற்போது அதிகரிக்க துவங்கி உள்ளது. அதேநேரம் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று ஒரே நாளில் மேலும் 55,838 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,06,946 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 79,415 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,74,518 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதித்த 7,15,812 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 702 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 1,16,616 பேர் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,69,984 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 9,86,70,363 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story