பீகார்: தேர்தலில் வெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி- பா.ஜனதா தேர்தல் அறிக்கை + "||" + BJP Promises 19 Lakh Jobs, Free Covid Vaccination In Bihar Manifesto
பீகார்: தேர்தலில் வெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி- பா.ஜனதா தேர்தல் அறிக்கை
பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்என தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா கூறி உள்ளது.
பாட்னா
கொரோனா தொற்றுநோய் கால கட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தல் பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் ஆகும். அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்.டி.ஏ) பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தனுக்கும் (எம்ஜிபி) நேரடிப் போட்டி ஏற்பட்டு உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. நிதிஷ்குமார் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும், அதே நேரத்தில் பா.ஜனாதாவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அவருக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
"பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் உள்ளது.
மேலும் அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
19 லட்சம் வேலை வாய்ப்புகள்
3 லட்சம் புதிய ஆசிரியர்கள் நியமனங்கள்
1 0 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க பீகாரை ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்வது
ஒரு கோடி பெண்களை தன்னம்பிக்கை கொள்ளச் செய்வது
சுகாதாரத் துறையில் ஒரு லட்சம் வேலைகள்
30 லட்சம் பேருக்கு புக்கா வீடுகள்
ஒன்பதாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மொபைல் டேப் என கூறப்பட்டு உள்ளது.
மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கும் நிலையில், அங்கு பா.ஜனதா வெற்றி பெறும் என கணிப்பதற்கு நீங்கள் கடவுளா? என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு செய்து ஜனநாயகத்தை பா.ஜனதா விலைபொருளாக மாற்றிவிட்டதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டி உள்ளார்.