தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,? + "||" + India sets aside $7 billion to vaccinate its people; Covid warriors, elderly priority beneficiaries: Report

இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?

இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி: 

இந்தியாவில் 130கோடி மக்களுக்கு இலவச கொரோனா  தடுப்பூசி போட நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கிட்டத்தட்ட 7 பில்லியன் டாலர்களை (சுமார்  ரூ, 5,16,42 கோடி) ஒதுக்கியுள்ளதாக ப்ளூம்பெர்க்  செய்தியை டைம் ஆப் இந்தியா மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு உள்ளது.

இதன் மூலம் மத்திய அரசு ஒரு நபருக்கு சுமார்  6 டாலர்முதல் 7 டாலர்கள் வரை (ரூ. 450-550) செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது.

ஒரு நபருக்கு இரண்டு ஊசி மருந்துகள் $ 2 (ரூ. 150) என்று மத்திய அரசு  மதிப்பிட்டுள்ளது, இது தவிர, தடுப்பூசி சேமித்தல் மற்றும் நாடு முழுவதும் அதன் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு செலவுகளாக தனிநபருக்கு 2 டாலர்கள்முதல் 3 டாலர்கள் வரை( ரூ150 முதல் ரூ 225 வரை ) ஒதுக்கப்படும் என்று அறிக்கை கூறியுள்ளது.

இதுவரை வழங்கப்பட்ட பணம் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டுக்கானது, மேலும் இந்த நோக்கத்திற்காக மேலதிக நிதிக்கு பற்றாக்குறை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய நிபுணர் குழு அறிக்கையின்படி, சுகாதாரத்ட்துறை  பொதுத்துறை மற்றும் மருந்துத் துறை, உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் வேளாண் வணிகத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளது. 

அதிக ஆபத்து உள்ள மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற கொரோனா போர்வீரர்கள் உட்பட சுமார் 30 கோடி முன்னுரிமை பயனாளிகளை இந்தியா அடையாளம் காணத் தொடங்கியுள்ளது.

கொரோனாவுக்கு எதாக போராடும் முன்கள வீரர்களைத் தவிர, வயதானவர்கள் மற்றும் இணை நோயுற்றவர்கள் கூட தடுப்பூசி பெற வாய்ப்புள்ளது.

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி நேற்று அறிவித்தார்.

அதுபோல் பா.ஜனதா  பீகாரில் தனது தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என் அறிவித்து உள்ளது.

மத்திய பிரதேச அரசும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என் அறிவித்து உள்ளது.

மூன்று தடுப்பூசிகள் மேம்பட்ட  3 வது கட்ட சோத்னையில் உள்ளனர். ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மூலம் இந்தியாவில் மனித சோதனைகளை நடத்தி வருகின்றனர். புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனமும் நாட்டில் சோதனைகளை நடத்தி வருகிறது.

இன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின், மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதி பெற்றது. டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் லிமிடெட் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஆகியவை ரஷ்ய தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளுக்கு புதிய ஒப்புதல் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளன.

இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா சிகிச்சையில்  உள்ளவர்கள் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களாக மொத்த எண்ணைக்கியில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. 10 கொரோனா நோயாளிகளில் ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் தினசரி நேர்மறை விகிதமும் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பராமரிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

நாட்டில் 7, 15,812  கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.இது மொத்த எண்ணிக்கையில்  9.29 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும்
ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட முகாம்கள் மூடப்பட்டன
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.
3. பிளஸ் - 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள்
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் பிளஸ் - 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
4. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் வழக்கம் போல் செயல்படும் - மாவட்ட நிர்வாகம்
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
5. சென்னையில் அதிகரிக்கும் கொரோனா 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் 7 குடும்பங்களை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது சென்னையில் அதிகரிக்கும் கொரோனாவால் 600க்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.