தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா + "||" + 54,366 Fresh Coronavirus Cases In India, Total Cases At 77.61 Lakh

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வந்த கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்து 366- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 77 லட்சத்து 61 ஆயிரத்து 312-ஆக உயர்ந்துள்ளது.  

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 690 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 306- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 69 லட்சம் பேர் குணம் அடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புடன் நாடு முழுவதும் 6 லட்சத்து 95 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு ‘பைசர்’ தடுப்பூசி வழங்க மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு
இந்தியாவுக்கு ‘பைசர்’ தடுப்பூசி வழங்குவது தொடர்பாக, மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று 1,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று புதிதாக 1,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைவு
இந்தியாவில் 132 நாட்களுக்கு பிறகு, கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைந்துள்ளது.
4. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங் தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியின் ஆடும் லெவனில் தமிழக வீரர் நடராஜன் இடம் பிடித்துள்ளார்.