பிரசாரத்தில் ராம்விலாஸ் பாஸ்வானை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி: நன்றி கூறிய சிராக் பாஸ்வான்
பீகார் தேர்தல் பிரசாரத்தில் ராம்விலாஸ் பாஸ்வானை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் நன்றி தெரிவித்துள்ளார்.
பாட்னா,
பீகார் மாநிலம் பயாடா மைதானத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் ரகுவன்ஷ் பிரசாத் சிங் ஆகிய இரண்டு மகன்களை இழந்து தவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் பதிட்ட, பாஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி தலைவருமான சிராக் பாஸ்வான், எனது தந்தையை நினைவு கூர்ந்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
என் தந்தையின் மீது பிரதமரின் அன்பையும் மரியாதையையும் பார்த்து ஒரு மகனாக மகிழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story