சோமாலியாவில் பிணைக்கைதிகளாக வைத்துள்ள இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம் - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல்


சோமாலியாவில் பிணைக்கைதிகளாக வைத்துள்ள இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம் - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல்
x
தினத்தந்தி 24 Oct 2020 3:45 AM IST (Updated: 24 Oct 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

சோமாலியாவில் பிணைக்கைதிகளாக வைத்துள்ள இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 25 பேர் உள்ளிட்ட இந்திய தொழிலாளர்கள் 33 பேர் சோமாலியா தலைநகர் மொகதீசுவில் உள்ள நிறுவனம் ஒன்றில் கடந்த 8 மாதங்களை பிணைக்கைதிகளாக சிறை வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்க கென்யாவில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ‘மொகாதீசுவில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் 33 பேரையும் மீட்டு இந்தியா கொண்டு வருவதற்காக மத்திய வெளியுறவுத்துறையும், நைரோபியில் (கென்யா) உள்ள இந்திய தூதரகமும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த தொழிலாளர்களின் இன்னல்கள் குறித்து சோமாலியா அதிகாரிகளிடம் கென்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

மேலும் இந்த விவகாரத்தில் இந்தியாவில் உள்ள சோமாலி தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story