தேசிய செய்திகள்

குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் + "||" + PM Modi to launch three major projects including Kisan Suryodaya Yojana in Gujarat today

குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
குஜராத்தில் மூன்று முக்கியமான திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
அகமதாபாத்

விவசாயத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகள் இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமற்றது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் மாநில விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பல நலத்திட்டங்களைத் தொடங்குகின்றன.

குஜராத்தில் மூன்று முக்கியமான திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

குஜராத் விவசாயிகளுக்காக 'கிசான் சூரியோதய யோஜனா' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். 'கிசான் சூரியோதய யோஜனா' என்பது பகலில் நீர்ப்பாசனத்திற்கு மின்சாரம் வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் பெற முடியும்.

இது தவிர,  சுற்றுலாவுக்காக கிர்னாரில் ரோப் கார் திட்டத்தையும் பிரதமர் மோடி துவக்கி வைப்பார். இது ஆரம்பத்தில் எட்டு பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 25-30 கேபின்களைக் கொண்டிருக்கும். இந்த ரோப்வே  7.5 நிமிடங்களில் 2.3 கிலோமீட்டர் தூரம் செல்லும். இந்த ரோப்வேயில் பயணம் செய்யும் போது கிர்னர் மலையைச் சுற்றியுள்ள இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.

மூன்றாவது திட்டமாக பிரதமர் மோடி யு.என். மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் தொடர்புடைய குழந்தை இதய மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார். மேலும் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் டெலிகார்டியாலஜிக்கான மொபைல் திட்டத்தை திறந்து வைப்பார். உலகத் தரம் வாய்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய சில மருத்துவமனைகளில் யு.என் மேத்தா நிறுவனம் ஒன்றாகும்.

மேத்தா இருதயவியல் நிறுவனம் ரூ.470 கோடி செலவில் விரிவுபடுத்தப்படுகிறது.  இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 450 முதல் 1251 ஆக உயரும். இந்த நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய ஒற்றை சூப்பர்-ஸ்பெஷாலிட்டி இருதய கல்வி நிறுவனமாகவும், உலகின் மிகப்பெரிய ஒற்றை சூப்பர் ஸ்பெஷாலிட்டி இருதய மருத்துவமனைகளாகவும் மாறும்.


தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன - பிரதமர் மோடி
விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன என வாரணாசியில் பேசும் போது பிரதமர் மோடி கூறினார்.
2. பிரதமர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்.
3. ‘மன் கி பாத்’: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
4. “கோவிஷீல்டு தடுப்பூசி” பணிகளை 28-ம் தேதி ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி
புனேவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பணிகளை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
5. ஒரு நாடு, ஒரு தேர்தல் என்பது விவாதத்திற்குரிய விஷயமல்ல, இது இந்தியாவின் தேவை - பிரதமர் மோடி
இன்றளவும் நாட்டில் மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற சம்பவம் நடக்காமல் பாதுகாத்து வரும் வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.