தேசிய செய்திகள்

தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா தொற்று + "||" + Former Maharashtra chief minister and BJP leader Devendra Fadnavis tests positive for COVID19

தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா தொற்று

தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா தொற்று
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

சீனாவில் உருவான கொடிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவிலும் ருத்ரதாண்டவமாடி வரும் கொரோனா, பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. 

பாமரன் முதல் உயர் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் வரை அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோரையும் கொரோனா தனது வலையில் வீழ்த்தியது. உத்தர பிரதேச பெண் மந்திரி ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.

இந்நிலையில்,  மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, 

கொரோனா பொதுமுடக்கம் தொடங்கிய நாள் முதல் நாள் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது கடவுளே என்னை ஓய்வு எடுக்கச் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.

எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மருந்து மற்றும் சிகிச்சையை எடுத்து வருகிறேன்  என பதிவிட்டுள்ளார்.

பீகார் சட்டப்பேரவைத் தோதல் பொறுப்பாளராக, மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர ஃபட்னவீஸை பாஜக நியமித்துள்ளது. தற்போது பீகார் தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.