தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனாவிற்கு இலவச தடுப்பூசி கிடைக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து + "||" + The entire country should get the vaccine for free, it is everyone's right Chief Minister Arvind Kejriwal

நாடு முழுவதும் கொரோனாவிற்கு இலவச தடுப்பூசி கிடைக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

நாடு முழுவதும் கொரோனாவிற்கு இலவச தடுப்பூசி கிடைக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து
நாடு முழுவதும் கொரோனாவிற்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்க வேண்டும். இது அனைவருக்குமான உரிமை என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியின் சாஸ்திரி பூங்கா மற்றும் சீலாம்பூர் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள இரு புதிய மேம்பாலங்களைத் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்கள் சேவைக்கு திறந்து வைத்தார். 

அப்போது அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

பாலங்கள் திறக்கப்பட்டதால் தற்போது மக்கள் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை எதிர்கொள்ள மாட்டார்கள். ரூ. 250 கோடியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இது அனைவருக்குமான உரிமை. இந்திய மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை