தேசிய செய்திகள்

மத்திய பிரதேச இடைத்தேர்தல்: சச்சின் பைலட் பிரசாரம் + "||" + Sachin Pilot to campaign for Congress candidates in MP bypolls

மத்திய பிரதேச இடைத்தேர்தல்: சச்சின் பைலட் பிரசாரம்

மத்திய பிரதேச இடைத்தேர்தல்: சச்சின் பைலட் பிரசாரம்
மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் பிரசாரம் மேற்கொள்கிறார்.
போபால்,

மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிந்த், மொரெனா மற்றும் ஷிவ்புரி ஆகிய இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சச்சின் பைலட் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சி சனிக்கிழமை அறிவித்தது.

அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகள் பைலட் பிரசாரம் மேற்கொள்கிறார். அக்டோபர் 28-ம் தேதி குவாலியரில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.