ஓ.பி.சி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு: அக்.26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு


ஓ.பி.சி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு: அக்.26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 24 Oct 2020 3:05 PM GMT (Updated: 24 Oct 2020 3:05 PM GMT)

ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டே 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அக்.26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.

புதுடெல்லி, 

மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்பட கூடிய மருத்துவ இடங்களில் 50% ஓ.பி.சி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பிரதானமான கோரிக்கையாகும். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்ற கருத்தை சொல்லி இருந்தனர்.

இந்த நிலையில் இந்த இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டுமென கோரி தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை மறுநாள் 26-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story