திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி,
கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு அங்கு அதிகரிக்க தொடங்கியதால் அங்கு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது.
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழக்கமான நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்கள் பக்கதர்கள் இன்றி நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி ‘கல்கி’ அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பதியில் உள்ள அலிபிரி பூதேவி காம்ப்ளக்சில் காலை 5 மணி முதல் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story