புதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது


புதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 26 Oct 2020 2:32 AM IST (Updated: 26 Oct 2020 2:32 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி அங்காடி மீண்டும் பெரிய மார்க்கெட்டிற்கு மாற்றப்பட்டது.

புதுச்சேரி,

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் புதிய பஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன. கடந்த ஆகஸ்டு மாதத்தில் பஸ்களை இயக்க முடிவு செய்த நிலையில் காய்கறி மார்க்கெட் நேரு வீதிக்கு மாறியது. அதன்பிறகும் பிரச்னை தொடர்ந்ததால் மீண்டும் பஸ் நிலையத்துக்கே கடைகள் திரும்பின.

இந்தநிலையில் தற்போது அரசு சாலை போக்குவரத்து பஸ்கள் மட்டுமல்லாமல் தனியார் பஸ்களும் ஓடத்தொடங்கி உள்ளன. பஸ் நிலையத்தின் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் அந்த வழியாக சென்று வருவதில் சிக்கல் எழுந்தது.

இதனையடுத்து பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி கடைகளை மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.  இதன்படி, கொரோனா ஊரடங்கில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி அங்காடி மீண்டும் பெரிய மார்க்கெட்டிற்கு மாற்றப்பட்டது.

இதனால் 7 மாதத்திற்கு பிறகு மீண்டும் பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

Next Story