மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல்; போலீசார் விசாரணை


மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல்; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Oct 2020 11:14 PM GMT (Updated: 2020-10-26T04:44:39+05:30)

மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  அந்த மாநில சட்டசபையில் பா.ஜ.க.வுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர்.  இந்த நிலையில், வருகிற நவம்பர் 3ந்தேதி 28 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் 9 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  இதற்காக, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் குவாலியர் நகரில் தப்ரா பகுதியில் ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இதில் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.  கூட்டத்திற்காக போடப்பட்டிருந்த சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story