திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் இன்று தொடங்கியது
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.
திருப்பதி,
கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன.
கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் அங்கு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நாள்தோறும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தான நிர்வாகம் முன் வந்துள்ளது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் இன்று தொடங்கியது.
திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் இன்று காலை 5 மணி முதல் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. அலிபெரியில் இன்று டிக்கெட் பெறும் பக்தர்கள் நாளை ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம்
Related Tags :
Next Story