இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவிகிதம் - சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவிகிதமாக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் உச்சம் தொட்ட கொரோனா, கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 45 ஆயிரமாக பதிவானது. தொற்று பாதிப்பால் நேற்று ஒருநாளில் மட்டும் 480- பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 59 ஆயிரம் பேர் மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90 சதவிகிதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 1.51-ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய இதுவரை 10,34,62,778- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 9 லட்சத்து 39 ஆயிரத்து 309- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story