இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல பாதுகாப்பு நிறைந்தது - பிரதமர் மோடி


இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல பாதுகாப்பு நிறைந்தது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 26 Oct 2020 12:55 PM GMT (Updated: 26 Oct 2020 12:55 PM GMT)

இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

இந்திய எரிபொருள் அமைப்பு மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியாவில் எரிபொருள் தேவை வரும் காலங்களில் இரட்டிப்பாகும். நாடு முழுவதும் விலை பாகுபாடின்றி எரிவாயு கிடைக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. எல்.இ.டி விளக்குகளின் பயன்பாட்டால் குறிப்பிடத்தக்க அளவில் மின்சார பயன்பாடு குறைந்துள்ளது. 

எல்.இ.டி விளக்குகளின் பயன்பாட்டல் இந்தியா ரூ.24 ஆயிரம் கோடி வரை சேமித்துள்ளது.  பயணிகள் விமானங்கள், வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பதால் எரிபொருள் தேவையும் அதிகரிக்கும்.

இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல பாதுகாப்பு நிறைந்தது. எரிசக்தி நுகர்வை 2 மடங்காக அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. உலக நலனை கருத்தில் கொண்டே இந்தியா எப்போதும் பணியாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story