மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் 4வது முறையாக குறைந்தது


மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் 4வது முறையாக குறைந்தது
x
தினத்தந்தி 26 Oct 2020 8:25 PM GMT (Updated: 26 Oct 2020 8:25 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பரிசோதனைக்கான ரூ.4,500 கட்டணம் அரசால் 4வது முறையாக குறைக்கப்பட்டு உள்ளது.

புனே,

நாட்டிலேயே மராட்டியத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்புகள் உள்ளன.  இதனால், கொரோனா தடுப்பு பணிகளில் அரசு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.  பல்வேறு கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனைகளுக்கு வசூலிக்க அனுமதிக்கப்பட்ட ரூ.4,500 கட்டணத்தில் அரசு 4வது முறையாக குறைத்து, திருத்தியமைக்கப்பட்ட கட்டண விகிதங்களை அறிவித்துள்ளது.

இதுபற்றி மராட்டிய சுகாதார மந்திரி ராஜேஷ் தோப் கூறும்பாழுது, ஒரு பரிசோதனைக்கு புதிய 
கட்டண விகிதங்கள் ரூ.900, ரூ.1,400 மற்றும் ரூ.1,800 என இருக்கும்.

ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகளுக்கான கட்டணம் ரூ.900 என வசூலிக்கலாம்.  கொரோனா சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களில் செயல்படும் ஆய்வகங்கள் வழியே நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளுக்கான கட்டணம் ரூ.1,400 ஆக இருக்கும்.

இது தவிர்த்து வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளுக்கு பரிசோதனை நடத்துவதற்கு ரூ.1,800 வசூலிக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

Next Story